Sunday, February 7, 2021

சொல் அந்தாதி - 182



சொல் அந்தாதி - 182 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.


1.    ராமன் தேடிய சீதை - என் உள்ளம் உந்தன் ஆராதனை  
2.    தம்பிதுரை          
3.   ஈரமான ரோஜாவே            
4.   நஞ்சுபுரம்      
5.   சங்கமம்        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும். 

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.net/
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

No comments:

Post a Comment