சொல் வரிசை - 196 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அலைகள் ஓய்வதில்லை(--- --- --- --- உயிரில் கலந்த உறவே)
2. குட்டி(--- --- --- --- என் காதல் முள்ளோ மலரோ)
3. தீர்த்தக் கரையினிலே(--- --- --- --- --- இதழில் ஒரு அமுதம் குடித்தேன்)
4. உரிமைக்குரல்(--- --- --- வந்த உடன்பிறப்பில்)
5. கோபுரங்கள் சாய்வதில்லை(--- --- --- வந்து ஆடை தீண்டுமே)
6. ஜகன்மோகினி(--- --- --- --- குத்துது எனையே சொல்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.