Saturday, November 17, 2018

சொல் வரிசை - 197



சொல் வரிசை - 197   புதிருக்காக, கீழே  எட்டு  (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மன்னன்(---  ---  ---  --- அம்மாவை வணங்காது)
  
2.   அன்னை ஓர் ஆலயம்(---  ---  ---  --- சிறகொடிந்த கிள்ளை)
  
3.   கோகுலத்தில் சீதை(---  ---  --- உன்னை தூக்கம் தழுவாதா)

4.   மதராசப்பட்டினம்(---  ---  --- உன் அன்பில் தானே நான்)  

5.   மனதில் உறுதி வேண்டும்(---  ---  --- மணியே போராட்டமா)

6.   நாடோடி தென்றல்(---  ---  மாலை இளம் கதிரழகே) 

7.   முன்னோடி(---  ---  --- ஒன்று நேரில் இன்று பார்க்கிறேன்) 

8.   புகழ்(---  ---  --- இனி வாழும் நாட்கள் எல்லாம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம்  பெற்ற   திரைப்படத்தின்   பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
    2. அம்மா...நீ சுமந்த பிள்ளை....
    3. எந்தன் குரல் கேட்டு...
    4. ஆருயிரே...ஆருயிரே...அன்பே
    5. கண்ணின் மணியே..கண்ணின் மணியே..
    6. மணியே மணிக்குயிலே...
    7. தெய்வம் தந்த சொந்தம்...
    8. நீயே வாம்க்கை என்பேன்..

    விடை: உழைப்பாளி திரைபடம்
    பாடல் : அம்மா அம்மா...
    எந்தன் ஆருயிரே....
    கண்ணின் மணியே...
    தெய்வம் நீயே...
    ஓ....ஓ....ஓ...ஓ..

    அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
    நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
    கண்ணின் மணியே
    ஓ...ஓ....ஓ...ஓ...
    தெய்வம் நீயே
    ஓ...ஓ...ஓ...ஓ...

    அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
    நானும் நீயும் என்றும் ஓருயிரே

    பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
    நீ வடித்தால் மனம் தாங்காது
    பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
    நான் துடிப்பேன் வலி தாளாது

    பத்து மாசம் சுமந்து-பட்ட
    பாடும் மறந்து
    பிள்ளைச் செல்வம் பிறக்க-அள்ளிக்
    கையில் எடுத்த

    தாயும் நீயே...
    தவமிருந்தாயே...

    வாடுதம்மா பிள்ளையே.......
    வாட்டுவதோ.. என்னை நீ..யே.!

    அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
    நானும் நீயும் என்றும் ஓருயிரே

    பாதைகள் மாறி ஓடிய கன்றை
    தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா
    கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்
    தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா

    நல்ல காலம் பிறக்க-உன்னை
    நானும் அறிந்தேன்
    உந்தன் கண்கள் திறக்க-இங்கு
    பாடல் படித்தேன்

    போதும் போதும்...
    பிரிந்தது போதும்....

    வாடுதம்மா பிள்ளையே...
    வாட்டுவதோ என்னை நீ..யே...

    பொன்சந்தர்

    ReplyDelete
  2. 1. மன்னன் - அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே

    2. அன்னை ஓர் ஆலயம் - அம்மா நீ சுமந்த பிள்ளை

    3. கோகுலத்தில் சீதை - எந்தன் குரல் கேட்டு

    4. மதராசப்பட்டினம் - ஆருயிரே ஆருயிரே அன்பே

    5. மனதில் உறுதி வேண்டும் - கண்ணின் மணியே கண்ணின் மணியே

    6. நாடோடி தென்றல் - மணியே மணிக்குயிலே

    7. முன்னோடி - தெய்வம் தந்த சொந்தம்

    8. புகழ் - நீயே வாழ்க்கை என்பேன்

    இறுதி விடை :
    அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
    கண்ணின் மணியே சொந்தம் நீயே
    - உழைப்பாளி

    ReplyDelete