Tuesday, August 21, 2018

சொல் வரிசை - 190



சொல் வரிசை - 190   புதிருக்காக, கீழே  ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   கேளடி கண்மணி(---  ---  ---  ---  --- அருகில் நீயின்றி தூங்காது)
  
2.   மாப்பிள்ளை(---  ---  ---  இல்லையே என்னை கொஞ்சம் காதலி)
  
3.   கண்ணா நலமா(---  ---  ---  --- தாலாட்டும் தாயானேன்)

4.   சில நேரங்களில் சில மனிதர்கள்(---  --- தேடிப் போவாளோ)  

5.   பாசமலர்(---  ---  ---  ---  --- ஊர் பேர் தான் தெரியாதோ) 

6.   நெஞ்சில் ஓர் ஆலயம்(---  ---  சொல் சொல் சொல் என்னுயிரே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டுபிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. திரு மாதவ் மூர்த்தி 1.9.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. கேளடி கண்மணி - நீ பாதி நான் பாதி கண்ணே

    2. மாப்பிள்ளை - வேறு வேலை உனக்கு

    3. கண்ணா நலமா - நான் கேட்டேன் அவன் தந்தான்

    4. சில நேரங்களில் சில மனிதர்கள் - வேறு இடம்

    5. பாசமலர் - யார் யார் யார் அவள் யாரோ

    6. நெஞ்சில் ஓர் ஆலயம் - சொன்னது நீதானா

    இறுதி விடை : நீ வேறு நான் வேறு யார் சொன்னது - மாயமோகினி

    ReplyDelete