சொல் வரிசை - 189 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தங்கப்பதுமை(--- --- பொங்கும் புதுவெள்ளமே)
2. ஜீவா(--- --- --- உன்னைத் தானா சொல்)
3. நீதி(--- --- --- --- சத்தியமடி தங்கம்)
4. ஆதி பகவன்(--- --- காதல் தவிர மண்ணிலே)
5. குலவிளக்கு(--- --- அதை கொண்டு வா)
6. ரட்சகன்(--- --- --- காத்தே என் நெஞ்சத்தில்)
7. காதல் கண் கட்டுதே(--- --- பாவம் செய்தேனோ)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://google.com
ராமராவ்
1. தங்கப்பதுமை - இன்று நமதுள்ளமே
ReplyDelete2. ஜீவா - நேற்று நான் பார்த்ததும்
3. நீதி - நாளை முதல் குடிக்க மாட்டேன்
4. ஆதி பகவன் - யாவும் பொய்தானா
5. குலவிளக்கு - கொண்டு வா
6. ரட்சகன் - போகும் வழி எல்லாம்
7. காதல் கண் கட்டுதே - காதலே என்ன
இறுதி விடை :
இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
- இன்று நேற்று நாளை