சொல் வரிசை - 169 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. காதலுக்கு மரியாதை (--- --- --- --- அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை)
2. பாத காணிக்கை (--- --- --- வீதி வரை மனைவி)
3. அவர்கள் (--- --- --- --- --- இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்)
4. புதுமைப்பித்தன் (--- --- --- நம் உருவம் தானே ரெண்டு)
5. எங்க பாப்பா (--- --- --- --- --- ஒரு அன்னை தந்தது ஒன்று காவல் கொண்டது)
6. கிழக்கே போகும் ரயில்(--- --- --- --- --- இங்கு வந்ததாரோ)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
7. தர்மா (--- --- --- ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க)
8. திருடன் போலீஸ் (--- --- உண்மை நான் கண்டேனே)
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
ReplyDelete1. காதலுக்கு மரியாதை - ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே
2. பாத காணிக்கை - வீடு வரை உறவு
3. அவர்கள் - இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
4. புதுமைப்பித்தன் - உள்ளம் ரெண்டும் ஒன்று
5. எங்க பாப்பா - ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
6. கிழக்கே போகும் ரயில் - கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
7. தர்மா - இரு கண்கள் போதாது
8. திருடன் போலீஸ் - தெய்வம் என்பதென்ன
இறுதி விடை :
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
- அவர் எனக்கே சொந்தம்
by மாதவ்