Tuesday, May 12, 2015

சொல் வரிசை - 79

 
சொல் வரிசை - 79  புதிருக்காக, கீழே   8  (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     ஏழை ஜாதி  (--- --- --- இளம் காதலர் பாடம்)
2.    காக்கி சட்டை ( --- --- --- பாடுதே வானம்பாடி ஆகலாமா)
3.    செம்பருத்தி (--- --- --- --- உலா போக நீயும் வரணும்) 
4.     கௌரி (--- --- --- --- போகுது என் மனம் எங்கோ)
5.     பாபு  ( --- --- --- --- நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே)

6.    சாந்தி நிலையம் (--- --- --- --- அவரவர் எண்ணங்களே)

7.    திரிசூலம் (--- --- கை குலுங்க வளையலிட்டேன்)
8.     வெற்றிக்கு ஒருவன் (--- --- --- நாயகன் நாயகி)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், ,மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
  

1 comment:

  1. திரு மாதவ் மூர்த்தி 17.5.15 அன்று அனுப்பிய விடை:

    1. ஏழை ஜாதி - அதோ அந்த நதியோரம்
    2. காக்கி சட்டை - வானிலே தேனிலா ஆடுதே
    3. செம்பருத்தி - நிலா காயும் நேரம் சரணம்
    4. கௌரி - ஊர்வலம் போகும் மேகங்கள் போலே
    5. பாபு - இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    6. சாந்தி நிலையம் - பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
    7. திரிசூலம் - மலர் கொடுத்தேன்
    8. வெற்றிக்கு ஒருவன் - தோரணம் ஆடிடும் மேடையில்

    இறுதி விடை :

    அதோ வானிலே நிலா ஊர்வலம்
    இதோ பூமியில் மலர்த் தோரணம்

    - தண்டனை

    ReplyDelete