Tuesday, October 21, 2014

சொல் வரிசை - 70


சொல் வரிசை - 70  புதிருக்காக, கீழே   6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   புதிய முகம் (--- --- --- --- காற்று என் காதில் ஏதோ சொன்னது)
2.   எங்கள் தங்கம் (--- --- --- எதையும் அளவின்றி கொடுப்பவன்) 
3.   யாதுமாகி (--- --- காதலில் உறைந்தேனடா)
4.   சலீம்  (--- --- --- --- என் தூக்கம் போனது)
5.   ஊரு விட்டு ஊரு வந்து (--- --- --- உன்ன தழுவ மனம் சம்மதமே)
6.   தில்லாலங்கடி (--- --- --- --- நில்லுனா நிக்காமே துள்ளுறியே) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

2 comments:

  1. திருமதி பவளமணி பிரகாசம் அனுப்பிய விடைகள்:

    1. நேற்று இல்லாத மாற்றம் என்னது
    2. நான் அளவோடு ரசிப்பவன்
    3. பார்த்ததும் கரைந்தேனடா
    4. உன்னை கண்ட நாள் முதல்
    5. தானா வந்த சந்தனமே
    6. சொல் பேச்சு கேட்காத சுந்தரியே

    பாடல் முதல் வரி: நேற்று நான் பார்த்ததும் உன்னை தானா சொல்

    இடம் பெற்ற படம்:ஜீவா

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி அனுப்பிய விடை:


    Netru naan parthathum unnaith thaana sol from jeeva.

    ReplyDelete