Wednesday, October 29, 2014

எழுத்துப் படிகள் - 82


எழுத்துப் படிகள் - 82 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி    கணேசன் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (7)  கமலஹாசன் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 82 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.      விளையாட்டுப்பிள்ளை                                          
2.     காத்தவராயன்                                          
3.     கல்தூண்                                        
4.     எதிர்பாராதது                                          
5.     எல்லாம் உனக்காக                                 
         
6.     நான் வணங்கும் தெய்வம்
7.     படித்தால் மட்டும் போதுமா     
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1. திரைப்படத்தின் தலைப்பு: "மணக்கோல ஜானகிமணாளன் " என்று பொருள்.                

2.   கமலஹாசன் இரு வேடங்களில் ஸ்ரீதேவியுடன் நடித்த திரைப்படம்.   
   
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

Tuesday, October 21, 2014

சொல் வரிசை - 70


சொல் வரிசை - 70  புதிருக்காக, கீழே   6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   புதிய முகம் (--- --- --- --- காற்று என் காதில் ஏதோ சொன்னது)
2.   எங்கள் தங்கம் (--- --- --- எதையும் அளவின்றி கொடுப்பவன்) 
3.   யாதுமாகி (--- --- காதலில் உறைந்தேனடா)
4.   சலீம்  (--- --- --- --- என் தூக்கம் போனது)
5.   ஊரு விட்டு ஊரு வந்து (--- --- --- உன்ன தழுவ மனம் சம்மதமே)
6.   தில்லாலங்கடி (--- --- --- --- நில்லுனா நிக்காமே துள்ளுறியே) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

Monday, October 20, 2014

எழுத்துப் படிகள் - 81


எழுத்துப் படிகள்81 க்கான அனைத்து திரைப்படங்களும்   ஜெயலலிதா  நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  சரத்குமார் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள்81 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     அனாதை ஆனந்தன்                                         
2.     சவாலே சமாளி                                         
3.     மணி மகுடம்                                       
4.     ஜீசஸ்                                         
5.     அவன்தான் மனிதன்                                
         
6.     ராமன் தேடிய சீதை 
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  திரைப்படத்தின் தலைப்பு:   " ராஜ்ஜியம் " என்று பொருள்.                
                 2- வது  எழுத்து "ம"   
   
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ்