Tuesday, May 6, 2014

சொல் வரிசை - 65


சொல் வரிசை - 65 புதிருக்காக, கீழே   7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   நாணயம் (--- --- --- --- பூலோகமே காலின் கீழே)
2.   அடுத்த வாரிசு (--- --- --- --- --- ஏதும் இல்லை வேகம் இல்லை) 
3.   பஞ்ச தந்திரம் (--- --- --- --- --- வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்)
4.   காதல் சுகமானது (--- --- --- --- காதல் சுகமானது)
5.   தங்கத்தின் தங்கம் (--- --- --- --- --- ஊர் முழுதும் கானம்பாடி திரிஞ்சு)
6.   சந்திப்பு (--- --- --- வர்ணமெட்டு நீதான் என் செல்லம்மா)
7.   செங்கோட்டை சிங்கம் (--- --- --- இனி என்றும் இங்கே இல்லே)
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 64 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   குலமகள் ராதை (கள்ள மலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே)
2.   யார் நீ (பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா) 
3.   என் அண்ணன் (கண்ணுக்கு தெரியாத அந்த சுகம் நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்)
4.   வீரபாண்டிய கட்டபொம்மன் (இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்டு மௌன)
5.   நீ வேணுண்டா செல்லம் (கள்ள தோணி கள்ள தோணிக்காரா அக்கறைக்கு கொண்டு செல்ல)
6.   எங்க வீட்டுப் பெண் (சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி)
7.   மாடி வீட்டு மாப்பிள்ளை (நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதை காட்டும் முன்னாடி)
8.   நான் பெற்ற செல்வம் (இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
கள்ள பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ள சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்   
 
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: எங்களுக்கும் காலம் வரும் 
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.    முத்து சுப்ரமண்யம்   
2.    மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்

Saturday, May 3, 2014

எழுத்துப் படிகள் - 72


எழுத்துப் படிகள் - 72 க்கான அனைத்து திரைப்படங்களும்   ஜெயலலிதா நடித்தவை.    ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 72 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     மேஜர் சந்திரகாந்த்                                
2.    மணி மகுடம்                                
3.    சித்ரா பௌர்ணமி                              
4.    திருமாங்கல்யம்                                
5.     நம் நாடு                        
         
6.    அனாதை ஆனந்தன்   
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
   
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 71 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.     மரகதம்                               
2.    சாரங்கதாரா                               
3.    திருவிளையாடல்                             
4.    அவன்தான் மனிதன்                               
5.    வடிவுக்கு வளைகாப்பு                       
         
6.    வம்ச விளக்கு 
7.    ராஜபார்ட் ரங்கதுரை    
 
இறுதி விடை:          அரச கட்டளை                    
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.     சுஜி 
2.    மாதவ் மூர்த்தி
3.    முத்து  சுப்ரமண்யம்   
4.    நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் 
     
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்