சொல் வரிசை - 198 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பள்ளிக்கூடம் (--- --- --- --- இப்படியே உறையாதா)
2. பணக்காரப்பெண்(--- --- --- உன் இதழில் எழுதும் இனிய)
3. விவசாயி(--- --- --- --- நாளும் விதை விதைக்கணும்)
4. ஹலோ யார் பேசுறது(--- --- --- புது நிலா பூச்சூடினாள்)
5. தாயின் மடியில்(--- --- --- --- எதுவும் நானாகும்)
6. சூரசம்ஹாரம்(--- --- --- அல்லவோ தேவ தேவி)
7. கண்ட நாள் முதல்(--- --- --- காதல் பெருகுதடி)
8. அவன்(--- --- வந்தேன்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.