சொல் வரிசை - 193 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பரதன் (--- --- பொங்கவரும் முத்தாரம்)
2. அண்ணாமலை (--- --- --- கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட)
3. கல்கி (--- --- --- அருள் தேடும் நெஞ்சமே)
4. கிளிப்பேச்சு கேட்கவா (--- --- நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே)
5. அமராவதி (--- --- --- --- நாம் பிறந்தது வாழ்ந்திடத் தானே)
6. தங்கப்பதுமை (--- --- --- விரல் நகத்தில் பவழத்தின் நிறம்)
7. புதையல் (--- --- --- நீ செங்கதிர் கண்டு சிரிப்பதினாலே)
8. டைம் (--- --- --- உன் நெஞ்சின் வண்ணம் என்ன)
9. மக்களை பெற்ற மகராசி (--- --- உனக்கு தெரியுமா சொந்தமுள்ள மச்சான்னு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.