சொல் வரிசை - 67 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வீரா (--- --- --- --- கோடை தென்றல் மலர்கள் ஆட)
2. மில் தொழிலாளி (--- --- --- --- வருந்தாதே உழைக்கும் தோழா)
3. எங்கேயும் காதல் (--- --- --- --- காதல் காதல் பிறந்ததோ)
4. சித்ராங்கி (--- --- --- இடையில் வந்த பந்தமா)
5. வெள்ளி நிலவே (--- --- --- --- மனசில் மட்டும் மன்னர் மன்னா)
6. வருத்தப்படாத வாலிபர் சங்கம் (--- --- உன்னாலே தொல்லையா போச்சு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. வீரா - கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட
ReplyDelete2. மில் தொழிலாளி - வரும் காலம் நம்ம காலம்
3. எங்கேயும் காதல் - நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
4. சித்ராங்கி - இன்று வந்த சொந்தமா
5. வெள்ளி நிலவே - கோபம் என்ன மண்டுக் கண்ணா
6. வருத்தப்படாத வாலிபர் சங்கம் - என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
இறுதி விடை :
கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா
- எல்லாம் உனக்காக