Saturday, June 28, 2014

சொல் அந்தாதி - 28

 
சொல் அந்தாதி  -  28     புதிருக்காக, கீழே  5  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  பெரிய இடத்துப் பெண்   -  அன்று வந்ததும் இதே நிலா
 
2.  வைகை
 
3.  அடுத்த வாரிசு 
 
4.  வாய்ச் சொல்லில் வீரனடி
 
5.  வேட்டைக்காரன் (NEW)  
 
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

Saturday, June 14, 2014

எழுத்துப் படிகள் - 77


எழுத்துப் படிகள் - 77 க்கான அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி கணேசன் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (7)  கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 77 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.      தங்கப்பதக்கம்                                     
2.     திருவிளையாடல்                                     
3.     பாதுகாப்பு                                   
4.     இரு துருவம்                                     
5.     எல்லாம் உனக்காக                            
         
6.     குங்குமம் 
7.     சாந்தி         
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  விடைக்கான திரைப்படத்தில் கமலஹாசனுடன் அர்ஜுனும்  நடித்திருந்தார். 
   
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

Friday, June 6, 2014

சொல் வரிசை - 67


சொல் வரிசை - 67 புதிருக்காக, கீழே   6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   வீரா (--- --- --- --- கோடை தென்றல் மலர்கள் ஆட)
2.   மில் தொழிலாளி (--- --- --- --- வருந்தாதே உழைக்கும் தோழா) 
3.   எங்கேயும் காதல் (--- --- --- --- காதல் காதல் பிறந்ததோ)
4.   சித்ராங்கி (--- --- --- இடையில் வந்த பந்தமா)
5.   வெள்ளி நிலவே (--- --- --- --- மனசில் மட்டும் மன்னர் மன்னா)
6.   வருத்தப்படாத வாலிபர் சங்கம் (--- --- உன்னாலே தொல்லையா போச்சு)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.