எழுத்து வரிசை புதிர் - 19 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 ஜெயம் ரவியின் மிக்க வீரம் (4)
2 ஊர்வசியின் புடவைத் தலைப்பில் ஒரு சிறு கட்டு (4,4)
3 வாணிஸ்ரீ ஒரு ஆசிரியை (6)
4 சிவாஜியின் உடன்பிறந்தவளுக்காக (6)
5 விஜயகுமாரி ஒரு தாணாக்காரனின் குமாரத்தி (6,3)
6 ஸ்ரீதர் இயக்கிய ஸ்ரீபிரியாவின் அழகே வரவேண்டும் வரவேண்டும் (6,3,3)
7 ஜானியும் காயத்ரியும் வாக்களிக்க தகுதி பெற்ற பருவம் (2,3)
8 புகைப்பட தொழிலால் தனுஷ் அடைந்த மூர்ச்சை? (5,3)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை:
பார்த்திபன் நடிப்பில் அவரது மாஜி மனைவி சீதா தயாரிப்பில் வெளியான திரைப்படம் . (4,4).
திரைப்படத்தின் பெயரின் இரு சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்றே. முதல் சொல்லின் இரண்டாவது எழுத்தும், இரண்டாவது சொல்லின் மூன்றாவது எழுத்தும் ஒன்றே.
ஷாலி என்ற நடிகை கதாநாயகி.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 18 க்கான விடைகள்:
1 சுவாமிமலை முருகக் கடவுள் பிரஷாந்த்? (7) - தகப்பன்சாமி
2 சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கும் விஜயகாந்த் (6) - கள்ளழகர்
3 ஜோதிகா பேசும் பாஷை (2) - மொழி
4 நல்லது நடக்க பிரஷாந்த் சொல்லும் வாழ்த்து (ஆங்கிலத்தில்) (2,2) - குட் லக்
5 ஜெமினி கணேசன் நெஞ்சத்தில் நீயா தேவிகா? (6,1) - இதயத்தில் நீ
6 பிணம் தின்னும் பறவையா ரஜினி காந்த் / கிருஷ்ணா ? (3) - கழுகு
எழுத்து வரிசை புதிர் விடை - நீர்க்குமிழி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, பாலகணேஷ்
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Suji,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.