Friday, April 19, 2013

எழுத்துப் படிகள் - 22



எழுத்துப் படிகள் - 22 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்   நடித்தவை
 
1 . கம்பனின் மைந்தன்  (6)
2 . வ.உ.சி   (7,4)
3 . காசு   (3)
4 . முரட்டு குணமுள்ளவன் ஆழ்கடலிலிருந்து எடுக்கும் ரத்தினம்  (4,3)
5 . அமாவாசைக்குப்பின் பௌர்ணமிக்கு முன் சந்திரனின் நிலை  (5)
6 . கணவன் உயிர் வாழ்ந்திருக்க தாலியுடனிருக்கும் மனைவி  (5)


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

  
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
 
இறுதி விடைக்கான திரைப்படம் (6) ;
 
சாவித்திரி கதாநாயகியாக நடித்த ராஜா ராணி கதை திரைப்படம். .
.
 
சிவாஜி கணேசன்   நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
 
விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன்  நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
 
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 22 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 . கூறத்தான் எண்ணுகிறேன்  (6,6)      - சொல்லத்தான் நினைக்கிறேன்  
2 . திருமாலின் பத்து பிறப்புகள் (6)       - தசாவதாரம் 
3 . வானுலகவாசியின் மைந்தன் (3,3)  - தேவர் மகன் 
4 . உவகையின் ஒளிப்பிழம்பு  (4,2)       - ஆனந்த ஜோதி 
5 . பெரிய மனம்  (5,4)                              - உயர்ந்த உள்ளம்          
6 . வாலிபம் தள்ளாடுகிறது? (3,8)          - இளமை ஊஞ்சலாடுகிறது     



இறுதி விடை:   ஆள வந்தான்  


சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  Suji, முத்து, பாலகணேஷ், Madhav, வைத்யநாதன்  



இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 
ராமராவ்
 
 
 
 

Thursday, April 11, 2013

எழுத்து வரிசை - 19




எழுத்து வரிசை புதிர் - 19 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:


 

1 ஜெயம் ரவியின் மிக்க வீரம்  (4)
2 ஊர்வசியின் புடவைத் தலைப்பில் ஒரு சிறு கட்டு  (4,4)
3 வாணிஸ்ரீ ஒரு ஆசிரியை  (6)
4 சிவாஜியின் உடன்பிறந்தவளுக்காக  (6)
5 விஜயகுமாரி ஒரு தாணாக்காரனின் குமாரத்தி  (6,3)
6 ஸ்ரீதர் இயக்கிய ஸ்ரீபிரியாவின் அழகே வரவேண்டும் வரவேண்டும்  (6,3,3)
7 ஜானியும் காயத்ரியும் வாக்களிக்க தகுதி பெற்ற பருவம்  (2,3)
8 புகைப்பட தொழிலால் தனுஷ் அடைந்த மூர்ச்சை?  (5,3)
 
 
 
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
 
எழுத்து வரிசைக்கான விடை:
 
பார்த்திபன் நடிப்பில் அவரது மாஜி மனைவி சீதா தயாரிப்பில் வெளியான திரைப்படம் . (4,4).
 
திரைப்படத்தின் பெயரின் இரு சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்றே. முதல் சொல்லின் இரண்டாவது  எழுத்தும், இரண்டாவது சொல்லின் மூன்றாவது எழுத்தும் ஒன்றே.
 
ஷாலி என்ற நடிகை கதாநாயகி.  

 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 18 க்கான விடைகள்:
 

1 சுவாமிமலை முருகக் கடவுள் பிரஷாந்த்? (7)                                                   - தகப்பன்சாமி 
2 சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கும் விஜயகாந்த் (6)      - கள்ளழகர் 
3 ஜோதிகா பேசும் பாஷை (2)                                                                                       - மொழி 
4 நல்லது நடக்க பிரஷாந்த் சொல்லும் வாழ்த்து (ஆங்கிலத்தில்) (2,2)          - குட் லக் 
5 ஜெமினி கணேசன் நெஞ்சத்தில் நீயா தேவிகா? (6,1)                                      - இதயத்தில் நீ 
6 பிணம் தின்னும் பறவையா ரஜினி காந்த் / கிருஷ்ணா ? (3)                         - கழுகு 

 



 
எழுத்து வரிசை புதிர் விடை -    நீர்க்குமிழி 


சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, பாலகணேஷ் 



இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

Sunday, April 7, 2013

சொல் வரிசை - 22




கீழே எட்டு  திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.      வால்டர் வெற்றிவேல் 
2.      பூவே பூச்சூடவா 
3.      காவல்காரன் 
4.      புதிய வாழ்க்கை 
5.      பேசு 
6.      மெரினா 
7.      மஜா 
8.      உதயகீதம்   

ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு: 

 

சொல் வரிசை விடைக்கான பாடல்:

 
விடைக்கான பாடலின் முதல் நான்கு சொற்கள் திரைப்படத்தின் பெயர் கூட.  
 

ராம்கி கதாநாயகன். 

 


சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 21 க்கான விடைகள்:

திரைப்படம்                                                             பாடலின் தொடக்கம்                                                      தொடக்கச் சொல்


1. மௌனராகம்                                  பனிவிழும் இரவு                                                             பனிவிழும் 
2. திரிசூலம்                                        மலர் கொடுத்தேன்                                                          மலர் 
3. நாடோடி பாட்டுக்காரன்                 வனம் எல்லாம் செண்பகப்பூ                                         வனம் 
4. வியட்நாம் வீடு                               உன் கண்ணில் நீர் வழிந்தால்                                       உன் 
5. யார் நீ                                              பார்வை ஒன்றே போதுமே                                            பார்வை 
6. சிவந்த மண்                                   ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக                            ஒரு 
7. சிப்பிக்குள் முத்து                           வரம் தந்த சாமிக்கு                                                         வரம்   

 

 

 மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

பனிவிழும் மலர் வனம் - உன் 
பார்வை ஒரு வரம்  


இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:  நினைவெல்லாம் நித்யா 


எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav, 10அம்மா

இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.