Saturday, February 22, 2014

சொல் வரிசை - 58

 
சொல் வரிசை - 58 புதிருக்காக, கீழே   7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   என் அண்ணன் (--- --- --- அவன் கல்லாய்ப் போன மனிதர்களாலே)
2.   அவசர கல்யாணம் (--- --- --- --- சிறையை விட்டு ஓடுதடா சிவகுருநாதா) 
3.   மாங்கல்யம் தந்துனானே (--- --- --- செய்த பாவம் விடாது)
4.   ஒரு தாய் மக்கள் (--- --- --- --- நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்)
5.   கண்காட்சி  (--- --- --- அது காவியத் தாயின் அரசாட்சி)
6.   ஓர் இரவு (--- --- --- --- இன்பம் சேர்க்க மாட்டாயா)
7.   ஆதி பகவன் (--- --- காதல் தவிர மண்மேலே)
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 57 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   இதய வீணை (ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன)
2.   சந்திப்பு (ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு) 
3.   பூட்டாத பூட்டுக்கள் (ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது)
4.   கிழக்கு வாசல் (வந்ததே ஓ ஓ குங்குமம் தந்ததே ஓ சம்மதம்)
5.   காதலுக்கு மரியாதை (ஆனந்தக் குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே)
6.   என் ராசாவின் மனசிலே (குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே)
7.   இளமைக் காலங்கள் (இசை மேடையில் இந்த வேளையில்  சுகராகம் பொழியும்)
8.   மாடி வீட்டு மாப்பிள்ளை (கேட்டுப் பார் கேள்விகள் நூறு பாட்டுப் பாடு காளை என்னோடு)

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்ததே
ஆனந்த குயில் இசை கேட்டு                           

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:    முறைமாமன்         

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 

1.   முத்து சுப்ரமண்யம்   
2.   மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  



ராமராவ்

Wednesday, February 19, 2014

எழுத்துப் படிகள் - 61

 
எழுத்துப் படிகள் - 61 க்கான அனைத்து திரைப்படங்களும்  கமலஹாசன் நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (3,3)  ரஜினிகாந்த்  கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 61 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.    இதயமலர்                    
2.   தசாவதாரம்                      
3.   சட்டம் என் கையில்                    
4.   சிங்கார வேலன்                     
5.   தேவர் மகன்             
         
6.   நாயகன்      
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 60 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.   தங்கப்பதுமை                   
2.  கந்தன் கருணை                     

3.  அண்ணன் ஒரு கோவில்                   
4.  மண்ணுக்குள் வைரம்                   
5.  பெற்ற மனம்            
         
6.  தாவணிக்கனவுகள் 
7.  அஞ்சல் பெட்டி 520        
      

இறுதி விடை:          பெண்ணின் பெருமை           
 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.  முத்து சுப்ரமண்யம்        
2.  சுஜி 
3.  மாதவ் மூர்த்தி
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்