சொல் வரிசை - 195 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மெட்ராஸ்(--- --- --- நிலா தூங்குமா)
2. வீரக்கனல்(--- --- பொட்டு வைப்பதும் யாருக்காக)
3. உதயா(--- --- --- --- தென்றல் சொல்லும் காலை வணக்கம்)
4. மீனவ நண்பன்(--- --- --- உறவு என்னும் சிறு நடனம்)
5. நூற்றுக்கு நூறு(--- --- --- --- புதிய சுகம் நான் தேடினேன்)
6. தங்க மீன்கள்(--- --- --- அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்)
7. காதல் ஓவியம்(--- --- --- --- கண்கள் வந்தும் பாவையின்றி)
8. தீர்ப்புகள் திருத்தப்படலாம்(--- --- --- அது காதல் பூபாளமே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.