கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மௌனராகம்
2. திரிசூலம்
3. நாடோடி பாட்டுக்காரன்
4. வியட்நாம் வீடு
5. யார் நீ
6. சிவந்த மண்
7. சிப்பிக்குள் முத்து
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்:
பாடலில் மொத்தம் எட்டு சொற்கள். விடைக்கான பாடலின் முதல் இரண்டு சொற்கள் முதலில் இடம் பெற்ற திரைப்படத்தின் பாடலின் முதல் இரண்டு சொற்கள்.
திரையில் ஜெமினி கணேசனின் மகள் கார்த்திக்குடன் இப்பாடலில் நடித்திருந்தார்.
திரைப்படத்தின் பெயரில் ஒரு பெண்ணின் பெயர் இருக்கிறது.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 20 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1. பலே பாண்டியா நான் என்ன சொல்லிவிடடேன் நான்
2. அடுத்த வாரிசு பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் பேச
3. நெஞ்சில் ஓர் ஆலயம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நினைப்பதெல்லாம்
4. வில்லு நீ கோபபட்டால் நானும் கோபப்படுவேன் நீ
5. நாளைய பொழுதும் உன்னோடு பேச பேராச கூச கண் கூச பேச
6. வசந்தத்தில் ஓர் நாள் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வேண்டும்
மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: பாலும் பழமும்
எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav, MeenuJai, 10அம்மா
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி