Friday, March 29, 2013

எழுத்து வரிசை - 18



எழுத்து வரிசை புதிர் - 18 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:



1 சுவாமிமலை முருகக் கடவுள் பிரஷாந்த்? (7)
2 சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கும் விஜயகாந்த் (6)
3 ஜோதிகா பேசும் பாஷை (2)
4 நல்லது நடக்க பிரஷாந்த் சொல்லும் வாழ்த்து (ஆங்கிலத்தில்) (2,2)
5 ஜெமினி கணேசன் நெஞ்சத்தில் நீயா தேவிகா? (6,1)
6 பிணம் தின்னும் பறவையா ரஜினி காந்த் / கிருஷ்ணா ? (3)
 
 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
எழுத்து வரிசைக்கான விடை:
K. பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்த திரைப்படம் . (6). திரைப்படத்தின் பெயரில் 3-வது எழுத்து மெய்யெழுத்து.


அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 17 க்கான விடைகள்:
 



1 கமலஹாசனின் கடிகார ஒலி (2,2,2)                       - டிக் டிக் டிக்
2 சௌகார் ஜானகி ஒரு சிறு காப்பிய நாயகி (4,3) - காவியத் தலைவி
3 ராமர் பாலம் கட்டிய விக்ரம்? (2)                              - சேது
4 நாசர் இயக்கிய பெண் தெய்வம் (3)                         - தேவதை
5 கார்த்திகாவின் ஜனனம் (4)                                        - பிறப்பு
6 பார்த்திபன் வடிவேலுவிடம் கேள்வி கேட்பது எசகு பிசகாக (5,5) -
                                                                                                    குண்டக்க மண்டக்க






 
எழுத்து வரிசை புதிர் விடை - புதுக்கவிதை


சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Suji, முத்து, 10அம்மா



இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

Saturday, March 16, 2013

சொல் வரிசை - 21



 
கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.      மௌனராகம்
2.      திரிசூலம்
3.      நாடோடி பாட்டுக்காரன்
4.      வியட்நாம் வீடு
5.      யார் நீ
6.      சிவந்த மண்
7.      சிப்பிக்குள் முத்து

ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:



சொல் வரிசை விடைக்கான பாடல்:
பாடலில் மொத்தம் எட்டு சொற்கள். விடைக்கான பாடலின் முதல் இரண்டு சொற்கள் முதலில் இடம் பெற்ற திரைப்படத்தின் பாடலின் முதல் இரண்டு சொற்கள்.
 
திரையில் ஜெமினி கணேசனின் மகள் கார்த்திக்குடன் இப்பாடலில் நடித்திருந்தார். 
 
திரைப்படத்தின் பெயரில் ஒரு பெண்ணின் பெயர் இருக்கிறது.  




சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 20 க்கான விடைகள்:

திரைப்படம்                                                   பாடலின் தொடக்கம்                                                  தொடக்கச் சொல்


1. பலே பாண்டியா                               நான் என்ன சொல்லிவிடடேன்                                     நான்
2. அடுத்த வாரிசு                                  பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்                           பேச
3. நெஞ்சில் ஓர் ஆலயம்                     நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்                            நினைப்பதெல்லாம்
4. வில்லு                                              நீ கோபபட்டால் நானும் கோபப்படுவேன்                    நீ
5. நாளைய பொழுதும் உன்னோடு     பேச பேராச கூச கண் கூச                                            பேச
6. வசந்தத்தில் ஓர் நாள்                      வேண்டும் வேண்டும் உங்கள் உறவு                           வேண்டும்


 
 

மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்


இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: பாலும் பழமும்


எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav, MeenuJai, 10அம்மா

இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

Wednesday, March 13, 2013

எழுத்துப் படிகள் - 20

எழுத்துப் படிகள் - 20 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . உள்ளம் உள்ளமட்டும் (9)
2 . ரத்தினங்கள் 3 (6,3)
3 . கடின உலோகத்தாலான படுதா (7)
4 . ஆதவன் தோற்றம் (6)
5 . ஆசானுக்கு அளிக்கும் காணிக்கை (6)
6 . நாங்கள் இரண்டுபேர் (2,4)


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
 
குறிப்பு:
 
 
இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) ;
பத்மினி கதாநாயகியாக நடித்த திரைப்படம்.
இந்தியில் திலீப்குமார், வைஜயந்திமாலா நடித்து வெளியான திரைப்படத்தின் தமிழாக்கம்.
சிவாஜி கணேசன் நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 19 க்கான குறிப்புகளின் விடைகள்:

1 . தலையாய கெளரவம் (3,4) - முதல் மரியாதை
2 . 100வது தினம் (4,2) - நூறாவது நாள்
3 . ஜானகியின் நாயகனே (7) - ராமச்சந்திரா
4 . மூவதனம் (3,3) - மூன்று முகம்
5 . பாண்டியன் (3) - மாறன்
6 . சகோதரராயிருத்தல் (7) - உடன்பிறப்பு

இறுதி விடை: மாமன் மகள்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Suji, Madhav


இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்